திருவள்ளூர் மாவட்டம் மாத்தூர், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதி 3-வது மெயின்ரோடு ஏரிக்கரை தெருவில் மின் இணைப்பு பெட்டி ஒன்று உள்ளது. இந்த மின் இணைப்பு பெட்டியில் கதவுகள் இல்லாமல் ஆபத்தான முறையில் திறந்து கிடக்கிறது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும், சாலையின் அருகில் இருப்பதால் வாகன ஓட்டிகள் அச்சத்துடனே அந்த சாலையை கடந்து செல்கின்றனர். எனவே, ஆபத்து உணந்து மின்வாரிய துறை அதிகாரிகள் மின்பெட்டிக்கு புதிய மூடியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.