திருவாரூர் மாவட்டம் கங்களாஞ்சேரியில் பொம்மானத்தம் தெரு உள்ளது. இந்த தெருவில் உள்ள வீடுகளை ஒட்டி மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. பலத்த காற்று வீசும் போது மின்கம்பிகள் மரக்கிளைகள் மீது உரசுகின்றன. இதனால் மின்கம்பிகளில் இருந்து அடிக்கடி தீப்பொறி வெளியேறுகிறது. தாழ்வாக செல்லும் மின்கம்பிகளால் மின்விபத்துகள் ஏற்படுமோ? என பொதுமக்கள் அச்சத்துடன் காணப்படுகின்றனர். எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?