திருவாரூர் மாவட்டம் குளிக்கரை அருகே சாருவம் கிராமத்தில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. கனரக வாகனங்கள் செல்லும் போது மின்கம்பியில் உரசி விபத்துகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதன்காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்கின்றனர். மின்கம்பிகள் மரக்கிளைகளின் மீது உரசுவதால் அடிக்கடி மின்கம்பியில் இருந்து தீப்பொறிகளும் வருகின்றன. எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன் மேற்கண்ட பகுதியில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.