திருச்சி மாவட்டம், தொட்டியம் வட்டம், அப்பநல்லூர் ஊராட்சி, கீழ சாலபட்டி காவிரி குடிதண்ணீர் குழாய் அருகில் உள்ள ஒரு மின்கம்பத்தின் அடிப்பகுதி சிதிலமடைந்து உள்ளது. இதனால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து அந்த மின்கம்பத்தை சரிசெய்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட "தினத்தந்தி" புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.