கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் தர்ஹா வளாகம் உரூஸ் மைதானம் அருகில் புனித சவேரியார் ஆலயம் செல்லும் சாலையின் அருகில் ஒரு மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்து கீழே விழும் ஆபத்தான நிலையில் உள்ளது. இப்பகுதி பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் ஒரு பள்ளி உள்ளதால் மாணவ- மாணவிகள் தினமும் சென்று வருகின்றனர். எனவே அசம்பாவித சம்பவங்கள் நடக்கும் முன்பு இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.