சங்கராபுரம் அருகே பாண்டலம் ஏரிக்கரை அருகில் செல்லும் உயர் மின்னழுத்த கம்பி மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்லும்போது மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகி உள்ளது. எனவே உயிர் சேதம் ஏற்படும் முன் உயரழுத்த மின் கம்பியை சரிசெய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.