அரியலூர் மாவட்டம், வாழைக்குறிச்சி பஞ்சாயத்திற்கு உட்பட்டது மதனத்தூர் கிராமம். இந்த கிராமத்தில் சுமார் 2 மாதங்களாக தெரு விளக்குகள் எரியாமல் பழுதடைந்து இரவு நேரத்தில் அடர்ந்த இருளாகவே உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் இரவு நேரங்களில் நடமாட மிகவும் அச்சப்படுகின்றனர். அதே சமயம் இந்த கிராமத்தில் சுமார் 3 மாதங்களுக்கு மேலாக குடியிருப்புகளில் சாக்கடை தேங்கி உள்ள நிலையில் குழந்தைகளோடு வசிக்கும் குடும்பங்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.