ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமம் வடக்கு தெரு மெயின் ரோட்டில் செல்லும் மின்சார கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குகிறது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. சாதாரணமாக எட்டி தொடும் அளவிற்கு மின்கம்பிகள் தொங்குவதால் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சாலையில் சென்று வருகின்றனர்.ஏதேனும் அசம்பாவிதம் நிகழும்முன் இதற்கு தீர்வுகாண வேண்டும்.