சிவகங்கை மாவட்டம் இளையான்குடி சுற்றிய சில பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சரியான தூக்கமின்றி அவதியடைகின்றனர். குறைந்த மின்னழுத்தத்தில் இயக்குவதால் மின்சாதன பொருட்கள் பழுதடைகின்றன. தொடர் மின்தடையை கட்டுப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?