மின் கம்பிகளில் விழும் தொன்னை மட்டைகள்

Update: 2024-07-21 11:33 GMT

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு அருகே உள்ள மாங்காடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலும் மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அனைத்தும் மரங்களுக்கு இடையே தான் செல்கின்றன. இதனால் மரக்கிளை மற்றும் தென்னை மட்டைகள் அவ்வப்போது விழுந்து வருவதால் ஏற்படும் மின் தடைகளால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இதனால் மின் வாரிய ஊழியர்களும் பெரும் சிரமத்தை சந்தித்து வருவதால், மரங்கள் நிறைந்த பகுதிகளில் பாதுகாப்பான முறையில் மின் கம்பங்களை கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்