பட்டரிவிளை பகுதியில் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கிறது. இதனால் காற்று வீசும்போது மின் கம்பிகள் ஒன்றுடன் ஒன்று உரசி நெருப்பு பொறிகள் ஏற்படுகின்றது. மேலும், மின் கம்பிகள் அறுந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் அச்சத்துடனேயே அந்த பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அரவிந்த், குளச்சல்.