சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-07-07 08:30 GMT

தென்தாமரைகுளம் அருகே உள்ள சித்தன்குடியிருப்பு பகுதியில் சாலையோரம் எல்.எஸ்.4/100 என்ற எண் கொண்ட மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்தின் மேல் பகுதியில் சிமெண்டு பூச்சுகள் பெயா்ந்து விழுந்து எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் ஒருவித அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே, ஆபத்தான நிலையில் காணப்படும் மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் நடுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ஜோனி மோசஸ், தென்தாமரைகுளம்.  

மேலும் செய்திகள்