தேவதானப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளுக்கு மின்இணைப்பு பெற கட்டணம் செலுத்தியுள்ளனர். ஆனால் கட்டணம் செலுத்தி பல மாதங்கள் கடந்தும் இன்னும் அவர்களுக்கு மின்இணைப்பு கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். எனவே மின்இணைப்பு கிடைக்க மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.