சென்னை கோவிலம்பாக்கம், சுண்ணாம்பு கொளத்தூர் பகுதியில் மின்கம்பம் பழுதடைந்து இருந்தது, இது குறித்து தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானதும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பழைய ஆபத்தான மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். நடவடிக்கை எடுத்த மின்வாரிய துறை அதிகாரிகளுக்கும், தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.