திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் வட்டம், பர்மா காலனி பின்புறம், ஶ்ரீராம் நகர் முதல் தெருவில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் மிகவும் சிதிலமடைந்த நிலையில் காணப்படுகிறது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சிதிலமடைந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.