புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை ஓரங்கள் மற்றும் வயல் வெளி பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின்கம்பங்களில் சில கம்பங்கள் சேதம் அடைந்து காணப்படுகிறது. இவை பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.