திருச்சி உலகநாதபுரம் நேரு தெருவில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில் சாலை ஓரத்தில் மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு அருகில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் இப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் பல ஆண்டுகள் ஆனதால் தற்போது அதன் அடிப்பகுதி உடைந்த நிலையில் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் முடிந்துவிழும் நிலையில் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின் கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்புகள் ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சார வாரியத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய மின் கம்பம் அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.