சென்னை ஓட்டேரி, ஜமாலியா ரோட்டில் ஒரு மின் இணைப்புப் பெட்டி உள்ளது. இந்த மின் இணைப்புப் பெட்டி ஒரு பக்கமாக சாய்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் விளையாடும் சிறுவர்களுக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மின்வாரிய துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மின் இணைப்புப் பெட்டியை அப்புறப்படுத்திவிட்டு புதிய மின் இணைப்புப் பெட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.