சேலம் ரெயில்வே ஜங்ஷன்-புதுரோடு செல்லும் வழியில் ரெட்டிபட்டி மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் மைய தடுப்புசுவரில் மின் கம்பிகள் ஆபத்தான நிலையில் விழுந்து கிடக்கிறது. மழைக்காலம் தொடங்க உள்ள நிலையில் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பு மின்கம்பிகளை சரிசெய்து தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.