ஆலங்குளம் தாலுகா கொல்லங்குளம் கிராமத்தில் தங்கம்மன் கோவில் அருகில் உள்ள மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் முழுவதும் பெயர்ந்து விழுந்ததால் பலத்த காற்றில் சரிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?