மயிலம் அருகே டி.கேணிப்பட்டு ஊராட்சியில் பிள்ளையார் கோவில் வீதியில் உள்ள ஒரு மின்கம்பம் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் அந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் முன் சேதமடைந்த கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பத்தை அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.