குஜிலியம்பாறையில் இருந்து புளியம்பட்டி செல்லும் சாலையில், ராமகிரி பிரிவில் சாலையோர மின்கம்பம் சேதமடைந்த நிலையில் உள்ளது. மேலும் மின்கம்பத்தின் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து எலும்பு கூடுபோல் காட்சியளிக்கிறது. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது. விபத்து ஏற்படும் முன்பு சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பம் அமைக்க வேண்டும்.