கரூர் மாவட்டம் நடையனூர், பேச்சிப்பாறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பு மின்கம்பம் நடப்பட்டு மின்கம்பி பொருத்தப்பட்டு அந்த கம்பத்திலிருந்து அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பி வழியாக 24 மணி நேரமும் மின்சாரம் செல்கிறது. இந்நிலையில் மின்கம்பம் நடப்பட்டு பல ஆண்டுகள் ஆனதன் காரணமாக மின் கம்பத்தில் உள்ள காங்கிரீட்டுகள் கீழே விழுந்து கம்பம் நெடுகிலும் கம்பிகள் தெரிகிறது. இதன் காரணமாக எந்த நேரத்திலும் மின்கம்பம் முறிந்து தார் சாலையில் விழ அதிக வாய்ப்பு உள்ளது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த மின்கம்பம் முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிகவாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.