ஆறுமுகநேரி பஜார் வடக்கு தெரு அம்மன் கோவில் அருகில் சாலையோரம் உள்ள இரும்பு மின்கம்பத்தின் மீது வாகனம் மோதியதில் வளைந்த நிலையில் உள்ளது. மேலும் உயரழுத்த மின்கம்பிகளும் தாழ்வாக தொங்குவதால் மின்விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே ஆபத்தான மின்கம்பத்தை அகற்றி விட்டு, புதிய மின்கம்பம் அமைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.