ஆதனக்கோட்டை அருகே உள்ள உரியம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வடக்குப்பகுதியில் குடியிருப்புகளுக்கு நடுவே உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. காற்றடிக்கும் நேரத்தில் விழுந்தால் மிகப்பெரிய விபத்து ஏற்படும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.