மரக்கிளைகளில் உரசும் மின் கம்பிகள்

Update: 2024-05-19 17:51 GMT
தியாகதுருகம் அருகே கள்ளக்குறிச்சி - கூத்தக்குடி சாலையில் கொங்கராயப்பாளையம் பிரிவு சாலையோர மின்கம்பிகள் அங்குள்ள மரக்கிளைகளில் உரசியபடி செல்கிறது. இதனால் பலத்த காற்று வீசும்போது அங்கு மின்விபத்து ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. மேலும் அவ்வப்போது அங்கு மின்தடையும் ஏற்பட்டு வருகிறது. எனவே விபரீதம் நிகழ்வதற்கு முன் அந்த மரக்கிளைகளை வெட்டி அகற்ற சம்பந்தப்பட்ட மின்வாரிய துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

மேலும் செய்திகள்