திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆலங்குப்பத்தில் பொதுமக்கள் போக்குவரத்து வசதிக்காக ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது. முறையான பராமரிப்பு இல்லாமல் இந்த பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. மேலும் இங்கு மின்விளக்குகளும் அமைக்கப்படவில்லை. இதனால் இரவு நேரங்களில் இங்கு வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயம் உருவாகியுள்ளது எனவே பொதுமக்கள் நலன் கருதி சுரங்கப்பாதையில் மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.