மின்கம்பத்தால் ஆபத்து

Update: 2024-05-19 12:02 GMT

கரூர் மாவட்டம், கரைப்பாளையம் அருகே தார் சாலையோரத்தில் உள்ள மின்கம்பம் பல ஆண்டுகளுக்கு முன்பு நடப்பட்டுள்ளது. இதில், மின் கம்பிகள் பொருத்தப்பட்டு அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்தனர். தொடர்ந்து 24 மணி நேரமும் மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் விழுந்து வெளியே தெரிகிறது. இதன் காரணமாக அதன் அருகே புதிதாக மின் கம்பம் நடப்பட்டது. ஆனால் பழைய மின்கம்பத்தில் உள்ள மின்கம்பிகளை புதிய கம்பத்தில் இணைக்காமல் கடந்த 2 ஆண்டுகளாக அப்படியே உள்ளது. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் முறிந்து கீழே விழும் நிலை ஏற்படும். எனவே மின்வாரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து பழைய கம்பத்தில் இணைக்கப்பட்டுள்ள மின் கம்பிகளை புதிய கம்பத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்