சென்னை மடிப்பாக்கம், பெரியார் நகர் 6-வது தெருவில் ஒரு மின்கம்பம் உள்ளது. அந்த மின்கம்பத்தில் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து விழுந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இதுகுறித்து மின்வாரிய துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.