ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் பல பகுதிகளில் சாலைகள் சேதமடைந்துள்ளது. இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும் கர்ப்பிணிகள், முதியோர், நோயாளிகள் அவதிப்படுகின்றனர். அவ்வப்போது சிறு, சிறு விபத்துகள் ஏற்படுகின்றன. வாகன ஓட்டிகள் நலன்கருதி சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுப்பார்களா?