கூடலூர் தாலுகா மண்வயல் பஜாரில் இருந்து நம்பாலக்கோட்டைக்கு செல்லும் சாலையில் 2 இடங்களில் மின்கம்பிகள் மிக தாழ்வாக செல்கிறது. இதனால் சரக்கு லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் செல்லும்போது உரசி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதன் காரணமாக அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. எனவே மின்வாரியத்துறையினர் ஆய்வு செய்து, மின்கம்பிகளை உயர்த்தி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.