சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-04-07 13:43 GMT

செங்கல்பட்டு மாவட்டம், குரோம்பேட்டை சேம்பர்ஸ் காலணி 6-வது தெருவில் மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சிதலமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மின்கம்பத்தின் சிமெண்டி பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளதால் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்