ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை கிராமத்தில் 4-வது வார்டு பகுதிகளான அண்ணா நகர், தேவர் நகர், அம்மன் கோவில் பகுதிகளில் ஏராளமானோர் வசிக்கின்றனர். இந்த பகுதிகளில் குறைந்த அழுத்த மின்சார பிரச்சினை நிலவி வருகிறது. இதனால் மின்சாதனங்கள் பழுதாவதுடன், குழந்தைகள் முதல் முதியோர் வரை அவதிடையும் நிலை உள்ளது. இதற்கு தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும்.