பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், வேப்பூர் ஊராட்சி ஒன்றியம், காடூர் கிராமத்தில் ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஒரு மின்கம்பம் எலும்பு கூடுபோல் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியிடப்பட்டது. இதனை அறிந்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக புதிய மின் கம்பத்தை நட்டு அதன் மூலம் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு மின் இணைப்பு கொடுத்தனர். இதற்கு செய்தி வெளியிட்ட தினத்தந்தி புகார் பெட்டிக்கும், நடவடிக்கை எடுத்த சம்பந்தப்பட்ட மின்சார துறை அதிகாரிகளுக்கும் இப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.