புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகா, வடகாடு தெற்கு முக்கம் மற்றும் மாங்காடு பகுதியில் விடங்கேஷ்வரர் செல்லும் வழியில் ஒரு மின்கம்பம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் தற்போது மிகவும் சிதிலமடைந்து எப்போது வேண்டுமானாலும் கீழே விழும் நிலையில் உள்ளது. இந்த மின்கம்பம் பொதுமக்கள் நடமாட்டத்தின்போது முறிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.