திருச்சி மாவட்டம், அம்மாப்பேட்டை பஞ்சாயத்து, வடக்கு அம்மாப்பேட்டை கிராமத்தில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சீரான மின்சாரம் வினியோகம் செய்யும் வகையில், மின்மாற்றி அமைக்க 2 மின்கம்பங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த மின்கம்பங்களில் மின்மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதியில் உள்ள வீடுகளில் உபயோகப்படுத்தப்படும் மின்சாதன பொருட்கள் சேதம் அடையும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட மின்சாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.