திருவள்ளூர் மாவட்டம், அலமாதி ஊராட்சிக்கு உட்பட்ட, பிள்ளையார் கோவில் தெருவில் மின் கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் சிதலமடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மின் கம்பத்தின் சிமெண்டி பூச்சு பெயர்ந்து விழுந்துள்ளதால் கம்பிகள் வெளியே தெரிகின்றன. இது பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படும் முன் அந்த மின் கம்பத்தை அகற்றிவிட்டு புதிய மின் கம்பத்தை அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.