தர்மபுரி- சேலம் சாலையில் இலக்கியம்பட்டி முதல் அரசு கலைக்கல்லூரி வரை உள்ள சாலை நள்ளிரவு வரை வாகன போக்குவரத்து அதிகளவில் இருக்கும் சாலை ஆகும். இந்த சாலையில் இரவு நேரத்தில் மைய தடுப்பில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள் பல நேரங்களில் எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் இந்த பகுதியில் வாகனங்களில் செல்பவர்கள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த சாலையில் மேற்கண்ட பகுதியில் நள்ளிரவு வரை மின்விளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்.