கரூர் மாவட்டம், அரவக்குறிச்சியில் உள்ள தாராபுரம் ரோட்டில் அரசு கால்நடை மருத்துவமனை முன்பு மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பத்தில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிந்து எப்போது வேண்டுமாலும் கீழே விழும் நிலையில் இருக்கிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த மின்கம்பத்தை மரற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.