மின்கம்பம் உடையும் அபாயம்

Update: 2024-03-17 17:55 GMT
பரங்கிப்பேட்டை ஒன்றியம் பூவாலை மேற்கு குளத்துமேட்டு தெருவில் உள்ள மின்கம்பத்தில் விரிசல் ஏற்பட்டு சேதமடைந்து காணப்படுகிறது. கம்பத்தை தாங்கி பிடிக்கும் கம்பியும் இல்லாததால் பலத்த காற்று வீசும் போது மின்கம்பம் ஆடிக்கொண்டே இருக்கிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அது உடைந்து கீழே விழும் அபாயம் உள்ளது. எனவே மின்கம்பம் விழுந்து அசம்பாவிதம் நிகழ்வதற்கு முன்பு சேதம் அடைந்த மின்கம்பத்தை மாற்றித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்