கேபிள்கள் அகற்றப்படுமா?

Update: 2024-03-17 13:57 GMT

சென்னை ஐஸ்ஹவுஸ், நடேசன் ரோட்டில் மின்மாற்றி ஒன்று உள்ளது. இந்த மின்மாற்றியில் தனியார் கேபிள் டி.வி. நிறுவனங்கள் நூற்றுக்கணக்கில் கேபிள்களை கட்டி வைத்துள்ளனர். இதனால் தீ பிடிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அந்த பகுதி வழியாக செல்லும் பொதுமக்கள் அச்சத்துடனே கடந்து செல்கின்றனர். எனவே மின்மாற்றியிலிருந்து கேபிள்களை அகற்ற மின்வாரிய துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்