பண்ருட்டி அருகே பலாப்பட்டு-நத்தம் இடையே உள்ள விவசாய நிலத்தின் அருகில் உயர் அழுத்த மின் கம்பிகளை தாங்கி பிடித்து நிற்கும் கம்பம் சாய்ந்தபடி நிற்கிறது. இதனால் மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்வதால் மின் விபத்து அபாயம் உள்ளது. எனவே அசம்பாவிதங்கள் நிகழ்வதற்கு முன் சம்பந்தப்பட்ட அதிகாரிகள், சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை உடனடியாக சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.