திருவள்ளூர் மாவட்டம், மணலி அடுத்துள்ள மாத்தூர் அரசினர் பள்ளி அருகே மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின்கம்பம் மிகவும் சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் குழந்தைகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். எனவே, மின்வாரிய துறை அதிகாரிகள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.