மின்விளக்கு வசதி

Update: 2024-02-18 15:32 GMT

சென்னிமலை-ஊத்துக்குளி சாலையில் எக்கட்டாம்பாளையம் ஊராட்சியில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் இணைப்பு வசதிக்காக அங்குள்ள சோலார் மின்கம்பம் அகற்றப்பட்டது. ஆனால் இந்த கம்பம் அகற்றப்பட்டு அங்கேயே கிடக்கிறது. மேலும் மின்விளக்கு இல்லாததால் அந்த வழியாக செல்லும் மக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். உடனே அந்த பகுதியில் மின்விளக்கு வசதி செய்துதர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்.

மேலும் செய்திகள்