சிதம்பரம் அடுத்த சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் உள்ள சாலையையொட்டி மின்கம்பம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் சாலையும் குறுகியதாக உள்ளது. இதனால் இந்த வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.