மங்கலம்பேட்டை அருகே மாவிடந்தல் கிராமத்தில் மின்மாற்றி உள்ளது. இந்த மின்மாற்றியை தாங்கி நிற்கும் கம்பங்கள் பலத்த சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் இந்த மின்மாற்றி எப்போது வேண்டுமானாலும் உடைந்து கீழே விழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதை தவிர்க்க சேதமடைந்த மின்மாற்றி கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.