சேதமடைந்த மின்கம்பம்

Update: 2024-02-04 13:51 GMT
கோலியனூர் அருகே விராட்டிகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட ராகவேந்திரா நகரில் உள்ள மின்கம்பத்தில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் அந்த மின்கம்பம் தற்போது மிகவும் பலகீனமடைந்து எப்போது வேண்டுமானாலும் உடைந்து விழும் நிலையில் உள்ளது. எனவே விபரீதம் ஏதும் ஏற்படும் சேதமடைந்த மின்கம்பத்தை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்