தெரு விளக்கு சரி செய்யப்படுமா?

Update: 2024-02-04 13:42 GMT

திருவள்ளூர் மாவட்டம், ஆவடி புதிய ராணுவ சாலையில் கடந்த 6 மாதமாக தெருவிளக்கு எரியவில்லை. சாலை முழுவதும் இருள் சூழ்ந்து உள்ளதால் இரவு நேரங்களில் திருட்டு நடக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த பகுதி வழியாக மக்கள் இரவு நேரத்தில் செல்ல மிகவும் அச்சப்படுகின்றனர். அதுமட்டுமின்றி சாலையில் திரியும் கால்நடைகள் மூலம் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். மக்கள் அதிகம் பயன்படுத்தும் பகுதி என்பதால் மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்