விழுப்புரம் அருகே கருங்காலிப்பட்டு கூட்டுச்சாலையில் சோலார் மின்விளக்கு அமைக்கப்பட்டிருந்தது. முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால், இந்த மின்விளக்கு பழுதடைந்து கீழே விழுந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதி இரவு நேரத்தில் இருள்சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்து வருகின்றனர். எனவே சேதமடைந்த சோலார் மின்விளக்கை சீரமைக்க வேண்டியது அவசியம்.