கடலூர் துறைமுகம் பச்சையாங்குப்பம் இரட்டை ரோட்டில் உள்ள சிதம்பரம், விருத்தாசலம் சாலை பிரியும் இடத்தில் உயர் கோபுர மின்விளக்கு கடந்த 2 மாதமாக எரியவில்லை. இதனால் இப்பகுதி இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து கிடப்பதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. மேலும் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெறும் அபாயமும் உருவாகியுள்ளது. எனவே பழுதடைந்த உயர்கோபுர மின்விளக்கை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.